விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புலியனூர் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பாதுகாப்பான முறையில் இடித்து அகற்றப்பட்டது.புலியனூரில் மிகவும் பழுதடைந்து, நான்கு தூண்களின் கம்பிகளும் பெயர்ந்து காணப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.அசம்பாவிதம் நிகழும் முன்பு நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் தொட்டியை இடித்து அகற்ற உத்தரவிட்டார்.அதன் பேரில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பாதுகாப்பான முறையில் இடித்து அகற்றப்பட்டது.அதே இடத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட உள்ளது.