காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பங்கள் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கும் நிலையில், அசம்பாவிதம் நிகழும் முன்பு அவற்றை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆதவப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கச்சேரி, பிளாஞ்மேடு பகுதிகளில் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பங்களும், மின்மாற்றியும் சேதமடைந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் எலும்பு கூடாக காட்சியளிக்கின்றன. மின்கம்பிகளும் தாழ்வாக செல்கின்றன. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லவும் அச்சமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.