மேலூர் அருகே கர்னல் பென்னிகுயிக் நினைவாக நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில், சிறார்கள் உற்சாகமாக பங்கேற்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே, கோட்டநத்தம்பட்டியில், மதுரை மாவட்ட இளைஞர் சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில் சுதந்திர தினம் மற்றும் கர்னல் பென்னிகுயிக் நினைவாக சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. 7 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்காக நடைபெற்ற இப்போட்டியில், 150 பேர் பங்கேற்றனர். கோட்டநத்தம்பட்டியில் இருந்து சிவகங்கை சாலையில் 11 பிரிவாக இப்போட்டி நடைபெற்றது. இதனை சாலையில் இருபுறமும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டு ரசித்த நிலையில், போட்டியில் பங்கேற்று பந்தய தூரத்தை கடந்து வந்து வெற்றிபெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.