திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் தென்பட்ட முதலை பிடிக்கப்பட்டு, வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். கொடியாலம் கிராமம் திண்டுகரை பகுதியில் முதலைகள் கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் கரையின் மேற்பகுதியில் இருந்த முதலையை வலைவீசி பிடித்தனர். மேலும், காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து வருவதால் திருச்சி முக்கொம்பு பகுதி ஆற்றங்கரையில் முதலைகள் ஒதுங்குவது அதிகரித்துள்ளதாகவும், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், காவிரி ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.