விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்திலும் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெற்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் ஜெயசீலன் கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தபோதும், அரசு மதுபான கடை அருகேயுள்ள முள்ளு காட்டுக்குள் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றது. மேலும் காவல் துறையினரும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.