சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கரடிப்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்றும், அடிப்படை வசதிகள் செய்து தராமல் போலி கணக்கு காட்டி மோசடி செய்வதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், கிராமத்தில் 21 மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ள நிலையில், உறுப்பினர்கள் பெயரில் பணம் வாங்கிக்கொண்டு பல குழு தலைவிகள் மோசடி செய்வதாக குற்றம்சாட்டினர். இவை எதற்குமே கிளர்க் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.