மதுராந்தகம் பகுதியில், ஒரு மணி நேரமாக கனமழை பெய்த நிலையில், மேம்பாலத்தில், ஆபத்தான முறையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நின்றிருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே மழையானது விட்டுவிட்டு பெய்து வருகிறது. மதுராந்தகம் சுற்று வட்டார பகுதியில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு, வாகனங்களை இயக்கினர். இரு சக்கர வாகனத்தில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், அதிக கன மழை காரணமாக, மேம்பால பகுதியில் ஆபத்தான முறையில், கன மழையால், நின்று செல்லக்கூடிய சூழல் உருவானது. செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மதுராந்தகம் பகுதியில் மட்டும் 98 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.