தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஆடு திருடிய கும்பலை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் வளர்த்து வந்த மூன்று ஆடுகளை, திருட்டு கும்பல் ஒன்று மினிவேனில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.