திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை, ஆட்சியர் பூங்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், முன்னாள் ராணுவத்தினருக்கான குறைதீர் கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு, பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதோடு, அவ்வப்போது துறை அலுவலர்களுக்கான மாதாந்திர கூட்டங்களும் நடத்தப்படுகிறது.இந்நிலையில் ஆட்சியரகத்தை சுத்தமாக பராமரிக்கும் வகையில், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதனை ஆட்சியர் பூங்கொடி ஒவ்வொரு அலுவலக அறையாக சென்று ஆய்வு செய்தார்.