சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சேதமடைந்த நிலையில் உள்ள விளையாட்டு சாதனங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு விரைவில் சீரமைக்கப்படும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 871 பூங்காக்களிலும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. சென்னை கே.கே. நகர் சிவன் பார்க்கில் நடைபெற்ற தூய்மைப் பணியை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, மாநகராட்சி பூங்காக்களை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் புதுப்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.