திருச்சி மாவட்டம் லால்குடி அருகே 8ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தச்சன்குறிச்சி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகன் வெற்றிவேலனுக்கு, இதய நோய் பாதிப்பு காரணமாக சிறுவயதில் இருந்தே சிகிச்சை பெற்று வந்த நிலையில், பள்ளிக்கு சென்ற அவர் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.