பொங்கல் பண்டிகையையொட்டி கோவிலில் நடந்த விளையாட்டு போட்டிகள். மைக்செட்காரரின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைதெறிக்க ஓடிய நபர். மைக்செட்காரரை கொலை செய்த நபர் யார்? மைக்செட்காரருக்கும் அந்த நபருக்கும் என்ன சம்மந்தம்? தப்பி ஓடிய கொலையாளி சிக்கினானா?மைக்செட்டை கழற்றியவரிடம் மல்லுக்கு நின்ற ஒரு நபர்பொங்கல் விளையாட்டு போட்டிகள் எல்லாம் முடிஞ்சதும், கையில பரிசுகளோட ஊர் பொதுமக்கள் கோவில்ல இருந்து வீட்டுக்கு கிளம்பி போய்ருக்காங்க. ஒருசில ஆண்கள் மட்டுமே கோவில்ல இருந்துருக்காங்க. அதுல, ஒருத்தரு மட்டும் கடும் ஆவேசத்தோட மைக் செட்காரரை திட்டிட்டே இருந்துருக்காரு. பதிலுக்கு மைக்செட்காரரும் திட்ட, கோவில்ல இருந்த ஆண்கள் ரெண்டுபேரையுமே அமைதிப்படுத்திருக்காங்க. ஆனாலும், வாக்குவாதம் நீண்டுகிட்டேதான் போயிருக்குது. ஒருகட்டத்துல, பொறுமையிழந்த அந்த நபர் மைக் செட்காரரை அடிச்சி கீழே தள்ளி கழுத்துல கத்தியால குத்திருக்காரு. கோவில்ல இருந்த ஆண்கள் அத தடுக்க முயற்சி பண்ணியும் முடியல. ஆத்திரம் தீர மைக் செட்காரரை குத்திட்டு அங்க இருந்து ஓடிட்டாரு அந்த நபர். அவரை விரட்டி பிடிக்கிறதவிட முதல்ல மைக்செட்காரரைதான் காப்பாத்தணும்னு முடிவு பண்ணின ஆண்கள், ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு ஓடிருக்காங்க. ஆனாலும், பரிசோதனை பண்ண டாக்டர்கள் மைக்செட்காரர் உயிரிழந்துட்டதா சொல்லிருக்காங்க. அடுத்து, தகவல் தெரிஞ்சி ஹாஸ்பிட்டலுக்கு வந்த போலீசார் அந்த ஆண்கள்கிட்டயும், ஊர்ல உள்ளவங்ககிட்டயும் விசாரிச்சிருக்காங்க. அப்பதான், கொலை செஞ்ச நபருக்கு மைக்செட்காரர்மேல என்ன ஆத்திரம்ங்குறதே தெரியவந்துச்சு.நீண்ட நாட்களாக தொழில்போட்டிமதுரை, திருமங்கலம் பக்கத்துல உள்ள கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்தவருதான் பிச்சை ராஜன். அதிமுக மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளரா இருந்த இவரு மைக் செட் தொழிலும் பண்ணிட்டு இருந்தாரு. அதே கிராமத்தை சேர்ந்த பாலமுருகனும் மைக்செட் தொழில்தான் பண்ணிட்டு இருக்காரு. இவங்க ரெண்டுபேருக்கும் தொழில் சம்மந்தமா பல நாளா முட்டல் மோதலாவே இருந்துருக்குது. ஊர்ல ஏதாவது விசேஷம்னா போட்டிபோட்டு மைக் செட் கட்டுன ரெண்டுபேரும், போட்டிபோட்டு பிரச்சனையும் பண்ணிருக்காங்க. இதுக்குமத்தியில, காளியம்மன் கோவில் தெரு பகுதியில உள்ள பிள்ளையார் கோவில்ல பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்துச்சு. ஒவ்வொரு வருஷமும் நடக்குற இந்த விளையாட்டு போட்டிகளுக்கு பாலமுருகன் மைக் செட் கட்டுறதுதான் வழக்கம். ஆனா, இந்த வருஷம் பிச்சை ராஜன் பணம் எதுவும் வாங்காம இலவசமா மைக் செட் கட்டி குடுத்துருக்காரு. அதனால கடுப்பான பாலமுருகன், ஒவ்வொரு வருஷமும் நான்தான் மைக் செட் கட்டிக்குடுப்பேன், இந்த வருஷம் இலவசமா கட்டிக்குடுத்து என்னோட இடத்தை பிடிச்சிட்டயானு ஆத்திரப்பட்ருக்காரு.பிச்சை ராஜனை கத்தியால் குத்திவிட்டு ஓடிய பாலமுருகன்விழா நடந்துட்டு இருக்கப்பகூட முணுமுணுத்துட்டே இருந்த பாலமுருகன், எப்படா விழா முடியும்னு காத்திருந்து பிச்சைராஜன்கிட்ட வம்பிழுத்திருக்காரு. பொங்கல் விழாவுல என்னோட மைக் செட்தான் எப்போதுமே கட்டுவாங்கனு தெரிஞ்சே, இலவசமா கட்டிக்குடுத்து என் தொழில்ல சறுக்கல ஏற்படுத்துறதாகவும், என் வழியில குறுக்க வந்தா கதைய முடிச்சிருவேனும் மிரட்டிருக்காரு பாலமுருகன். கோவில்ல இருந்த ஒருசில ஆண்கள், இப்பதான் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிஞ்சிருக்குது, ஊர் மக்களும் சந்தோஷமா இருக்காங்க, என்ன செஞ்சாலும் கோவிலுக்கு செய்றதா நினைச்சி விட்டுக்குடுத்து போங்கனு ரெண்டுபேரையுமே சமாதானப்படுத்திருக்காங்க. ஆனா, அதையெல்லாம் காதுகுடுத்து கேக்காத பாலமுருகன், தான் மறைச்சி வச்சிருந்த கத்தியால பிச்சைராஜனோட கழுத்துல குத்திட்டு தப்பி ஓடிட்டாரு. உயிருக்கு போராடிட்டு இருந்த பிச்சை ராஜனை, கோவில்ல இருந்த ஆண்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடனே கொண்டுபோயும் அவர காப்பாத்த முடியல. இந்த கொலை சம்மந்தமா வழக்குப்பதிவு பண்ணிருக்குற ஆஸ்டின்பட்டி போலீசார், தப்பி ஓடுன பாலமுருகனை வலைவீசி தேடிட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - ஆடுவெட்டும் அரிவாளுக்கு இரையான அக்கா