Also Watch
Read this
By: Manigandan Raja

போலீசார் இடையே தள்ளுமுள்ளு :
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா எருமைப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பொட்டி ரெட்டிபட்டி ஊராட்சி பகுதியில் பொன்னேரி கைகாட்டி பகுதியில் இருந்து கோம்பை வரை பொதுமக்களுக்கு சாலை வசதி செய்து தர வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் சந்திக்க வந்தவர்கள் குண்டுக்கடாக கைது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்திப்பதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் உட்பட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் வந்திருந்தனர்.
இன்று காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி வேண்டி நேற்று காவல் நிலையத்தில் மனு கொடுத்திருந்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுக்கப்படுகிறது என்று செயல்முறையானை கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறை உத்தரவையும் மீறி 60க்கும் மேற்பட்ட நபர்கள் கொடி பிடித்து கோஷங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அப்போது நல்லிபாளையம் காவல் ஆய்வாளர் விவசாய சங்கத்தினரை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல கூடாது என்று உங்களை அனைவரையும் கைது செய்கிறேன் என்று தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இந்த நிலையில் இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் வகையில் சம்பவம் மனது நடைபெற்றது விவசாய சங்கத்தினர் எங்கள் மேல் ஏன் கை வைக்கிறாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினர் ஒவ்வொருவராக குண்டுகட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர் அப்போது முதியவர் ஒருவர் பச்சமுத்து என்பவரை வாகனத்தில் ஏற்றும் போது பிரசர் அதிகமாக இருந்த நிலையில் மயங்கி சாலையில் விழுந்தார்.
அப்போது காவல்துறையினர் அடுத்தவர்களை வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தபோது சாலையில் படுத்திருந்த முதியவரை ஷு காலால் மிதித்த காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
தொடர்ந்து காவல் ஆய்வாளர் வாடா என ஒருமையில் பேசி போயா உள்ள என கடுமையான சொற்களால் விவசாய சங்கத்தினரை கூறி குண்டு கட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். விவசாய சங்கத்தினரும் கடுமையான சொற்களால் பேசினர் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தில் இந்தப் போராட்டத்தில் சிறுவர் சிறுமிகள் உட்பட 40 பேரை கைது செய்து ஆயுத படை சமுதாய கூட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved