மதுரையில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரையில் குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தங்கினார். அதே சுற்றுலா மாளிகையில் மற்றொரு கட்டடத்தில் தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மரியாதை நிமித்தமாக, சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசி உள்ளார். அப்போது எம்.பி. கனிமொழி உடன் இருந்தார். பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து நிலையில், திமுகவின் மூத்த அமைச்சர்களும் அப்போது உடன் இருந்தனர், இதுகுறித்து தமது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள திரு.@CPR_VP அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்," என்று பதிவிட்டுள்ளார். இதையும் பாருங்கள்... குடியரசு துணைத் தலைவரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்