Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் அருகே பணியில் இருந்த தலைமை காவலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காணை காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சுந்தரமூர்த்தி. வழக்கு விசாரணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved