தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காணம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது தாயார் ஜெயகுருத்து ஆகியோர் குரும்பூர் நோக்கி ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது சோனகன்விளை அருகே திருச்செந்தூரை நோக்கி எதிரே அதிவேகத்தில் வந்த கார், இவர்களது ஆட்டோ மீது அதிபயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் மூதாட்டி ஜெயகுருத்து உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், காரை ஓட்டி வந்தவர் மற்றும் மூதாட்டியின் மகன் மணிகண்டன் ஆகியோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.