திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புறவழிச்சாலையில் முன்னால் சென்ற கார் மீது பின்னால் வந்த கார் மோதி தூக்கி வீசப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தாமரைகுளத்தை சேர்ந்த ராஜேஷ், குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, கரூரை சேர்ந்த கார்த்தி என்பவர் பின்னால் ஓட்டி வந்த கார் வேகமாக மோதியதில், ராஜேஷ் குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் படுகாயமடைந்தனர்.