திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குபு குபுவென்று அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது. தென்னம்பட்டி வடக்கு மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.