கடலூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர்களின் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக காணப்பட்டது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கன மழை மற்றும் பகல் நேரங்களில் அதிகப்படியான வெயில் என மாறி மாறி வந்த பருவநிலையால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளன. பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மர்ம காய்ச்சல் பரவுகிறதா என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.