2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என, மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், தமிழக மக்கள் திமுகவை விரட்டியடிக்க காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.