மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற பைக் மெக்கானிக் சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த மணிகண்டன், நண்பருடன் மது அருந்திய பின் வேளச்சேரி நோக்கி சென்ற போது மேடவாக்கம் மேம்பாலத்தில் விபத்தில் சிக்கி கீழே விழுந்தார்.