சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, இருமதி கிராமத்தில் உள்ள பாலாருடைய அய்யனார்- காளியம்மன் கோவில் மகா சிவராத்திரியை ஒட்டி, மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில், 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், சுமார் 40 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை அடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் 17 வீரர்கள் காயம் அடைந்தனர்.