மதுரையில் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்தது. சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகே விமானம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.