பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். கடலூரில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி தண்ணீர் பந்தல் பகுதி அருகே புறவழிச் சாலையில் செல்வதற்காக வலது புறமாக திரும்பிய போது, சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் மோதியது. விபத்தில் வேனின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது.