சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசன் தொடங்கியதை அடுத்து, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலும் பக்தர் கூட்டம் அலைமோதியது. இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முருகனை வழிபட்டு தங்கள் பயணத்தை தொடர குவிந்துள்ளனர். காலை முதல் குடும்பத்துடன் திரண்டு வந்த பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க காவடி எடுத்து வந்து, ஆடிப்பாடி முருகனை வழிபட்டனர். பொது மற்றும் கட்டண தரிசனங்களில் கூட்டம் அதிகமானதால் சுமார் மூன்று மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.