77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆனைமலை பகுதியில் உள்ள ஸ்ரீ சத்யேந்திர சித்தர் பீடத்தில் பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் பானை மீது நின்று தொடர்ந்து 30 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர். 30 நிமிடங்கள் ஒலித்த இறைவணக்க பாடல்கள்,தேவாரம், மற்றும் செம்மொழி ஆகிய பாடல்களுக்கு எல்.கே.ஜி.துவங்கி பள்ளி கல்லூரி வரை பயிலும் மாணவ,மாணவிகள் 51 பேர் இணைந்து, பானை மீது நின்று பரத நாட்டிய நடனம் ஆடினர். களிமண் பானைகள் மீது நின்றபடி சமநிலையோடு நின்ற மாணவர்கள் தாளத்திற்கு ஏற்ப ஆடியதை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர் தொடர்ந்து அரை மணி நேரம் பானை மீது நின்று பரதம் ஆடிய இந்நிகழ்வு குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இது குறித்து கோவை நாட்டிய கலாஷேத்ரா நிறுவனர் ஏலியா நிஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சாதனை முயற்சிக்காக தொடர்ந்து சுமார் ஆறு மாதகாலம் பயிற்சி எடுத்துள்ளதாகவும்.தற்போது மாறி வரும் டிஜிட்டல் உலகில் பரதகலை கற்பதன் அவசியம் மற்றும் பரத நாட்டியம் ஆடுவதால் ஏற்படும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சாதனையை மாணவிகள் செய்துள்ளதாக தெரிவித்தார். Related Link சிவகங்கையில் காவடி சுமந்து பழநிக்கு புறப்பட்ட நகரத்தார்