தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சந்தையில் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அணைக்கரைப்பட்டி, டி.புதூர், மூணாண்டிபட்டி, சித்தார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக மழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது மழை குறைந்து ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 150 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் விடப்படுகிறது.