நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் குழாய்களை அமைக்குமாறு நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், ஒரு சில இடங்களில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. எனவே நிலைமையை கருத்தில் கொண்டு கூடுதல் குடிநீர் குழாய்களை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.