கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் பின்புறம் எலைட் மதுபான பார் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் கையில் தாலிக் கயிறுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் மதுபானக்கடையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்ற தவெகவினரை, போலீசார் பேரிகார்டுகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தவெகவினர், கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.