news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
tv

Also Watch

tv

Read this

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அம்மன்குறிச்சி, புதுக்கோட்டை

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDK Temple event

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் : 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக
நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கும்பாபிஷேக
விழாவில் தொடர்ந்து முதலாம் இரண்டாம் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

மேலும் கும்பாபிஷேக விழாவில் விக்னேஸ்வர பூஜை, ரக்ஷா பந்தனம், கோ பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதனைத்
தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கடம் புறப்பாட்டின்போது பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு 3 நாட்களாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோவில் விமானத்தை அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். பின்னர் தீபாதாரணையும் தீர்த்தவாரியும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புனித நீரை பிடித்து தலையில் தெளித்து வழிபாட்டனர்.

பொதுமக்கள் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.பொன்னமராவதி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Link
பகுத்தறிவாளர்களை சாடிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

பகுத்தறிவாளர்களை சாடிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

0
17 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved