மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ வெளியாகியுள்ளது. எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், எய்ம்ஸ் மருத்துவமனையின் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள், போக்குவரத்து வசதி, புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்ட பணிகள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், இரண்டாம் கட்டப் பணிகளை 2027 ஆம் ஆண்டு முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.