மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர்களே தூற்றி கொண்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை அயனாவரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் 96.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருக்குள திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரை சந்தித்த போது, இன்றைக்கு வாக்குப் பதிவா அல்லது தேர்தலுக்கான முடிவை அறிவிக்கிறார்களா, எதுவும் இல்லை என கூறிய சேகர்பாபு, முருக பக்தர்கள் மாநாடு பாஜகவிற்கு எந்த திருப்பு முனையையும் ஏற்படுத்தாது எனக் கூறினார்.இதையும் படியுங்கள் : 471 ரன்கள் குவித்தும் மோசமான சாதனை பட்டியலில் முதலிடம்..