கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாமக்கல் அருகே நடைபெற்ற என்கவுன்ட்டரின்போது கேரள ஏ.டி.எம். கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், டி.எஸ்.பி. இமயவர்மன் உள்ளிட்ட போலீஸாரும், நகர முக்கிய பிரமுகர்களும் சால்வை மற்றும் மாலை அணிவித்தும், இனிப்பு ஊட்டியும் உற்சாக வரவேற்பு அளித்து, இருவரையும் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.