இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவர் மீது போர்த்தப்பட்ட துணியின் நகல் உதகை தேவாலயத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த போது, கல்லறையில் இருந்த துணி இத்தாலியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த துணியின் உண்மை தன்மையை அறிவதற்காக எடுக்கப்பட்ட 6 நகல்கள் உலகம் முழுவதும் ஒவ்வொரு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதன் ஒரு நகல் உதகை சூசையப்பர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து ஏராளமான மக்கள் அதனை தொட்டு வணங்கினர். தொடர்ந்து குன்னூரில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்ட பின்னர் அந்நகல் கேரளாவிற்கு எடுத்து செல்லப்பட உள்ளது.