புதுக்கோட்டை அருகே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பட்டா ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆதிதிராவிட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கீழவிளாங்குடியில் வசிக்கும் ஆதி திராவிட மக்கள் 192 பேருக்கு 1990-ல் பட்டா வழங்கப்பட்ட நிலையில், 135 பேர் வீடு கட்டி குடியிருக்கும் நிலையில், மீதமுள்ள 57 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, வேறு நபர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்கள் : திருமணம் செய்து கொள்வதாக கூறி மாமன் மகளுடன் உறவு... வேறொரு பெண்ணுடன் மனமுடிக்க முயன்ற ஆசாமி கைது