திண்டுக்கலில் திரையரங்கில் நுழைய விடாமல் தடுத்த ரசிகர்களிடம் நடிகர் விக்ரம் கோபமடைந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. தமது நடிப்பில் வெளியாகியுள்ள வீர தீர சூரன் படத்தை பார்ப்பதற்காக, உமா ராஜேந்திரன் திரையரங்கிற்கு சென்றார். அவரது காரில் ஏறி ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.