news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews களம் இறங்கினார் நடிகர் வடிவேலு
tv

Also Watch

tv

Read this

களம் இறங்கினார் நடிகர் வடிவேலு

திமுக மேடையில் வடிவேலு...

45

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுகவை யாராலும் அசைக்க முடியாது, ஆனால் ஒரு கூட்டம் கத்திக் கொண்டு இருக்கிறது, என நடிகர் வடிவேலு, திமுக மேடையில் பேசி உள்ளார்.

ஆக்கப்பூர்வமான முதல்வர்
சென்னை, கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசியதாவது;
எங்கோ போர் நடக்கிறது என்பதால், கடந்த சில நாட்களாக ஒரு பீதி கிளம்பியது. யாருக்குமே உணவு கிடைக்காது, கொரோனா, பண மதிப்பிழப்பு காலத்தைப் போல, பொது மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் வரும் என்று பயமுறுத்தினார்கள். பெட்ரோல், டீசல் நிலையங்களில் பொது மக்கள் குவிந்தனர். ஓட்டல்கள் மூடப்பட்டன. எங்கோ நடக்கும் போரினால் நம் வீட்டு அடுப்பு எரியாது என்று பயமுறுத்தினார்கள். அந்த இக்கட்டான சூழலிலும், நமது தமிழக முதலமைச்சர் பதற்றமடையாமல், உடனடியாகப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். "முதலில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க என்ன வழி என்று பாருங்கள்" என்று ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டார்.

இதுவே திமுக பாணி
மேடையில் வசனம் பேசுவதை விட, செயல்பாட்டில் காட்டுவதே தி.மு.க-வின் பாணி. தமிழ்நாட்டில் இந்தக் கட்சி இல்லை என்றால் இத்தனை ஆண்டுகளாக நாம் பெற்ற அனைத்தையும் இல்லாமல் ஆக்கி விடுவார்கள். தமிழ்நாடு என்ற பெயரைக் கூட மாற்றி விடுவார்கள். இந்த தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி இல்லை என்றால், ஒட்டுமொத்த பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடும். பெண்கள், குழந்தைகள், சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். எந்த நெருக்கடியையும் சந்திக்கும் ஆற்றல் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

யாராலும் அசைக்க முடியாது
திமுகவை யாராலும் அசைக்க முடியாது. இதுபோன்ற வரலாறு எந்தக் கட்சிக்கும் கிடையாது. திடீரென மகளிர் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதை கேட்டு, தி.மு.க அழிய வேண்டும் என்று கனவு கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மக்கள் இன்ப அதிர்ச்சியில் இருந்தபோது, எதிரிகள் அதிருப்தியில் இருந்தார்கள். இது வெறும் ஆரம்பம் தான், முதலமைச்சர் இன்னும் எக்கச்சக்கமான நன்மைகளை செய்யப் போகிறார்.

ஒரு கூட்டம் கத்திக் கொண்டு இருக்கிறது
இங்கே ஒரு கூட்டம், "திமுகவை ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும்" என்று கத்திக் கொண்டு இருக்கிறது. மக்கள் அழியாமல் இருக்க என்ன வழி என்று யோசிக்காமல், ஒரு இயக்கத்தை அழிப்பதையே குறிக்கோளாக கொண்டவர்கள் கடைசியில் காணாமல் போகின்றனர். திமுக என்பது தஞ்சாவூர் கோபுரத்தைப் போன்றது, மிகப்பெரிய வரலாற்றுச் சாம்ராஜ்யம்.

200க்கும் மேல்...
வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது நமது லட்சியம் மட்டுமல்ல, அது நிச்சயம் நடக்கும். தற்போது நடக்கும் இந்த விழாக்கள், அவர் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பதற்குக் கொடுக்கப்படும் முன்கூட்டிய வாழ்த்துக்களாகவே பார்க்கிறேன். முதலமைச்சர் நமக்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்கிறார். எத்தனை மேடு பள்ளங்கள் வந்தாலும், தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும். 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' என்ற வரிகளுக்கேற்ப, நாம் அஞ்சாமல் கடமையாற்ற வேண்டும். 2026ல் ஒரு மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பரிசாக அளித்து, தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ நாம் பாடுபட வேண்டும். முதல்வரின் 73ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த வேளையில், அவரது செயல்பாடுகளைப் பார்த்தால் அது 37ஆவது பிறந்தநாள் போல இளமையாகத் தெரிகிறது.
இவ்வாறு நடிகர் வடிவேலு உரையாற்றினார்.


Related Link
உழைப்பை  மட்டும் கொடுங்கள், உயிரை அல்ல - முதல்வர்

உழைப்பை மட்டும் கொடுங்கள், உயிரை அல்ல - முதல்வர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

0
18 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved