news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நியூஸ் தமிழ் எதிரொலியால் தனியார் காவலாளிகள் மீது நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

நியூஸ் தமிழ் எதிரொலியால் தனியார் காவலாளிகள் மீது நடவடிக்கை

திருச்செந்தூர், தூத்துக்குடி

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Thiruchendur

தனியார் காவலாளிகள் மீது நடவடிக்கை :

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்பு பணியில் தனியார் காவலாளிகள் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமை காவலாளி ஐயப்பன் என்பவர் பிறந்த நாளில் கோவில் பொது தரிசன வரிசையில் ஆறாவது காத்திருப்போர் அறையில் வைத்து கேக் வெட்டி, மாலை அணிவித்து சக காவலாளிகள் வாழ்த்து தெரிவித்து புகைப்படம், வீடியோ எடுத்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பெரும் பேசு பொருளாக மாறியது. கோவில் வளாகத்தில் தரிசன வரிசையில் காத்திருக்கும் அறையில் நடந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆன்மீகப் பெரியோர்கள் முருக பக்தர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து நியூஸ் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனால் கோவில் நிர்வாகம் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ஏழு நாட்கள் பணி செய்ய தடை விதிக்கும்படி காவலாளி நிறுவனத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தி இந்த காவலாளிகள் நிறுவனத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
புதுவையிலும் பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 வரவு

புதுவையிலும் பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 வரவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 11 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved