காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வசித்து வரும் இளம்பெண், அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்ததாக கூறும் இளம்பெண், வருமானம் இல்லாமல் இரு குழந்தைகளுடன் சிரமப்படுவதாக தெரிவித்தார். மேலும் இரு குழந்தைகளில், ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாக இருப்பதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் குழந்தையை பார்த்துக் கொள்வதிலேயே நேரம் செலவிடுவதாகவும், இதனை அரசு கவனத்தில் கொண்டு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.