ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட கும்டாபுரம் வனப்பகுதி சாலையில் நின்ற யானையை விரட்ட சென்ற வனத்துறையினரை யானை விரட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தாளவாடி வனப்பகுதி சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து ஒற்றை காட்டு யானை சில நாட்களாக சாலையில் முகாமிட்டுள்ளது.தாளவாடி கும்டாபுரம் சாலையில் முகாமிட்டிருந்த யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நிற்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் யானையை விரட்ட சென்றனர்.ஆனால் யானை வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.