Also Watch
Read this
By: Manigandan Raja

பொதுமக்கள் பீதி :
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பொழுது காடுகளில் கடும் வரட்சி நிலவுவதால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து செல்வது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
ஒரு சில யானை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களில் உலா வருவதும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நெலாக்கோட்டை பஜார் பகுதியில் வனப்பகுதியில்
இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஊருக்குள் நடந்து வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர் .
தொடர்ந்து இந்த காட்டு யானை ஆனது கடந்த சில வாரங்களாகவே இந்த பகுதிகளில் வருவது தொடர்கதை ஆகியுள்ளது எனவும் தொடர்ந்து இந்த காட்டு யானையை கண்காணித்த வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved