நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் இரவு நேரத்தில் ராட்சத மலைப்பாம்பு சாலையை கடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மசினக்குடியில் இருந்து மாயார் நோக்கி சென்றவர்கள், முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியில் மலைப்பாம்பு சாலையை கடப்பதை கண்டு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பின்னர், மலைப்பாம்பு சாலையை கடப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், முதுமலை வனப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் மிகவும் மெதுவாகவும் கவனமுடனும் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.