news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews லாரி மீது வேன் மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

லாரி மீது வேன் மோதி விபத்து

மதுரை

187

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வேன்

மேலூர் அருகே கோயிலுக்கு சென்றவர்கள் வேன் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பெண்கள் உட்பட 5க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த 12கும் மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து எட்டையபுரம் அருகேயுள்ள சிந்தலைக்கரை கோயிலுக்கு வேனில் சென்றுக் கொண்டிருந்தனர்.

லாரி மீது கோயிலுக்கு சென்ற வேன் மோதி விபத்து

இந்நிலையில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மணப்பட்டி இந்திரா நகர் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை வந்துக் கொண்டிருந்த வேன், முன்னாள் சென்ற லாரியின் மீது எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

பெண்கள் உட்பட 5க்கும் மேற்பட்டவர்கள் காயம்
இதில் வேனில் பயணம் செய்த பாண்டிச்சேரி அருகே ஒளிஞ்சான்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் (44) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மேலும், வேனில் பயணம் செய்த அவருடைய மனைவி ஜெயலட்சுமி, விழுப்புரத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சந்தோஷ், மற்றும் வேண்டாம் மணி, முத்து, பானு, மகேந்திரன் உள்ளிட்ட 6கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கொட்டாம்பட்டி காவல்துறையினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த குறித்து கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கோவிலுக்கு சென்றவர்கள் வேன் விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
அந்த காரை இப்போ யார் வச்சிருக்கா?

அந்த காரை இப்போ யார் வச்சிருக்கா?

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 29 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved