சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வுக்கு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த புனிதா என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால், தனியார் கல்லூரியில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இதனிடையே பாரா மெடிக்கல் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் அரசு கல்லூரியில் சீட் கிடைக்காததால் புனிதா மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புனிதா இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.