Also Watch
Read this
Posted on: Dec 22, 2024 01:24 AM
By: Srini Vasan

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்த 9ஆம் வகுப்பு மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்கொலை செய்யும் நோக்கில் குதித்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரபல தனியார் பள்ளியான அல்போன்சா பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், 2வது தளத்தில் உள்ள வகுப்பறையில் தேர்வெழுதிக் கொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி திடீரென வெளியே சென்று கீழே குதித்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved