சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் பள்ளியில் கழிப்பறைக்குச் சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. பள்ளி முன் திரண்ட பெற்றோர், சுற்றுச்சுவர் பகுதியில் சிசிடிவி அமைத்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.