Also Watch
Read this
By: Manigandan Raja
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 15,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-01 தங்கம், வெள்ளி விலை
சென்னையில், மார்ச் 1ஆம் தேதி ஞாயிறன்றும், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 26,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 225 விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 325 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து 3 லட்சத்து 25,000 ரூபாயாக இருந்தது.
மார்ச்-02 தங்கம், வெள்ளி விலை
சென்னையில், ஒரு சவரன் 22 காரட் ஆபரண தங்கம், ரூ.920 குறைந்து, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.115 குறைந்து ரூ.15,660க்கு விற்பனை ஆனது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில், வாரத்தின் முதல் நாளான மார்ச் 2ஆம் தேதி, லேசான சரிவை கண்டது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிந்தது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 315 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-03 விலை நிலவரம்
ஆபரணத் தங்கத்தின் விலை மார்ச் 03ஆம் தேதி, ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.15,650க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 315க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனை ஆனது.
மார்ச்-04 தங்கம் வெள்ளி விலை
ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 265 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக சரிந்தது. ஒரு கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மார்ச்-05 தங்கம், வெள்ளி விலை நிலவரம்
ஒரு சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 15,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
01.03.2026 - ரூ.1,26,200
02.03.2026 - ரூ.1,25,280
03.03.2026 - ரூ.1,23,720
04.03.2026 - ரூ.1,21,600
05.03.2026 - ரூ.1,20,960
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved