சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,600 ரூபாயாக இருந்தது. சென்னையில் வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிப்.7ஆம் தேதி விலை நிலவரம் சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, பிப்ரவரி 7ஆம் தேதி காலை, பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,420க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,360 ஆக இருந்தது. வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.285க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ரூ.2,85,000க்கும் விற்பனை ஆனது. வாரத்தின் முதல் நாளில்... சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வை கண்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான, பிப்ரவரி 9ஆம் தேதி, தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650 க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை ஆனது. தங்கம், வெள்ளியின் விலை அதிரடியாக அதிகரித்திருப்பது, பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பிப்.10 விலை நிலவரம்சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை.பிப். 11 - இன்றைய மார்க்கெட் நிலவரம் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.சென்னையில், இன்று பிப்ரவரி 11ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,600க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800க்கும் விற்பனை ஆனது.வெள்ளி விலையில் மாற்றமில்லைவெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை ஆனது. Related Link இன்றைய ராசி பலன்கள் 11022026