கால்வாயில் விழுந்த வடமாநில சிறுவன் : ராமேஸ்வரம் நகர பகுதி சுற்றிலும் முறையான அனுமதிகள் இன்றி ஆயிரக்கணக்கான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதிகள் முறையான கழிவு நீர் கால்வாயில் அமைக்கப்படாமல் இருப்பதினால் தனியார் தங்கு விடுதிகள் ஆங்காங்கே கழிவு நீர் கால்வாய் தொட்டிகள் அமைத்து கழிவு நீர்களை வெளியேற்றி வருகின்றனர் இந்த நிலையில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிரபல தங்கும் விடுதி சாலை ஓரத்தில் கழிவு நீர் கால்வாயில் அமைத்து அதில் கழிவுகளை வெளியேற்றி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது இந்த நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த சாந்தனு சர்க்கார் என்பவர் மகன் 12 வயதான டிபன்ஸ் சர்க்கார் என்ற சிறுவன் தனியார் தங்கும் விடுதி வெளியேறும் கழிவு நீர் கால்வாய் வழியாக கடைக்கு சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக கழிவு நீர் கால்வாய் தொட்டிக்குள் விழுந்துள்ளார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சிறுவனை கழிவு நீர் கால்வாயில் இருந்து மீட்டதை அடுத்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார் இந்த நிலையில் கழிவுநீர் கால்வாயில் சிறுவன் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்பவரை பதற வைக்கின்றது இதற்கு சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாக அதிகாரிகள் சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையை அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். Related Link சேலம் நீதிமன்றத்தில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை