பொள்ளாச்சி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் திடீரென புகை வந்த நிலையில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.